பிளஸ்டூ முடித்தவர்கள் கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

பிளஸ்டூ முடித்தவர்கள் கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?
பிளஸ்டூ முடித்தவர்கள் கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?
Published on

இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய Sailor எனப்படும் மாலுமி பணிக்கான SSR ஆகஸ்ட் - 2020 பயிற்சி சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: மாலுமி
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் (Artificer Apprentice) (AA)
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் (Senior Secondary Recruit) (SSR) 

காலிப்பணியிடங்கள்:
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் - 500
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் - 2,200
மொத்தம் = 2,700 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 08.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.11.2019

வயது வரம்பு: 
விண்ணப்பிக்க விரும்புவோர் 01.08.2000 மற்றும் 31.07.2003 என்ற தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்களாக இருத்தல்
வேண்டும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.215
குறிப்பு: 
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
2. ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும். 

கல்வித்தகுதி:
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்களை பயின்று குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்களை பயின்று குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.joinindiannavy.gov.in/ (அல்லது) https://www.joinindiannavy.gov.in/en/account/login- என்ற இணையதள முகவரியில் சென்றுவிண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: 
1. கணினி வழித்தேர்வு
2. உடற்தகுதி தேர்வு
3. மருத்துவ தகுதி தேர்வு

பயிற்சிக் காலம்:
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் - 9 வாரங்கள்
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் - 22 வாரங்கள்

ஊக்கத்தொகை: 
தொடக்கக்கால பயிற்சியின் போது ரூ.14,600 மாத ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பயிற்சி முடிவுக்கு பின் பல்வேறு சலுகைகளும், திறமைக்கேற்ற பணியும் வழங்கப்படும்.

மேலும், இது குறித்த முழுத்தகவல்களை பெற, https://www.joinindiannavy.gov.in/files/event_attachments/AASSR0820_Eng.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com