திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை: நீங்களும் விண்ணப்பிக்கலாம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை: நீங்களும் விண்ணப்பிக்கலாம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை: நீங்களும் விண்ணப்பிக்கலாம்
Published on

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை மின் பொறியாளர், மின் கம்பியாளர், எலக்ட்ரீசியன், உதவி கம்பியாளர், பிளம்பர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்:

இளநிலை மின் பொறியாளர் - 01

மின் கம்பியாளர் - 02

எலக்ட்ரீசியன் - 01

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து மின்சார வாரியம் வழங்கும் மின் பொறியியல் 'சி' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உதவி கம்பியாளர் - 05

பிளம்பர் - 03

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழகத்தை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tiruchendurmurugantemple.tnhrce.in என்ற திருக்கோயிலின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அரசு பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்த பெறப்பட்ட நன்னடத்தை சான்று நகல் மற்றும் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் அங்கீகாரத்திற்குப் பின்னர் பணி நியமனம் செய்யப்படுவர். சான்றிதழ்கள் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னரே பணி நியமன ஆணை வழங்கப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  முகவரி
இணை ஆணையர்/நிர்வாக அதிகாரி,
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
திருச்செந்தூர் - 628215
தூத்துக்குடி மாவட்டம்.

அனுப்பப்படும் விண்ணப்பத்தின் மேலுறையின் மீது கண்டிப்பாக விண்ணப்பிக்கும் பணியிடத்தின் பெயரை குறிப்பிட்ட அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tiruchendurmurugantemple.tnhrce.in/employment.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com