பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 600 பேருக்கு அதிகாரி வேலை!

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 600 பேருக்கு அதிகாரி வேலை!
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 600 பேருக்கு அதிகாரி வேலை!
Published on

நாட்டிலுள்ள அரசுத்துறை வங்கிகளில் இரண்டாவது பெரிய வங்கி பாங்க் ஆஃப் பரோடா. இந்த வங்கியில் 600 புரபேஷனரி அதிகாரி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 90 இடங்களும், பழங்குடியினருக்கு 45 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 162 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 303 இடங்களும் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் டிகிரி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு ஜூலை 02 ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 20 வயதுக்குக் குறையாமலும் 28 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அதாவது 03.07.1990 க்கு முன்னதாகவோ அல்லது 02.07.1998 க்கு பிறகோ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். 

இந்தப் பணிக்கு எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?

ஆன்லைன் தேர்வு, குரூப் டிஸ்கஷன், நேர்முகத் தேர்வு, PSYCHOMETRIC தேர்வு அடிப்படையில் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைன் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். அப்ஜெக்ட்டிவ் முறையில் ஆன்லைன் தேர்வு இருக்கும். ரீசனிங், ஆப்டிட்யூட், இங்கிலீஷ் லாங்க்வேஜ் (கிராமர், வெகாபுலரி, காம்ப்ரிஹென்சன்), ஜெனரல் அவேர்னெஸ் (வங்கி சம்பந்தபட்ட கேள்விகள்) ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு விடையளிக்க மொத்தம் 2.30 மணி நேரம் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. ஒரு தவறான விடைக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும். 

ஆன்லைன் தேர்வில் தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக குரூப் டிஸ்கஷன் மற்றும் இன்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த ஆன்லைன் தேர்வு வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த ஆன்லைன் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவள்ளுர், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 


மணிப்பால் ஸ்கூல் ஆஃப் பாங்கிங் நிறுவனத்தில் ஒரு வருட படிப்பு?

இப்பணிக்கு தேர்வி செய்யப்படுபவர்களை மணிப்பால் ஸ்கூல் ஆஃப் பாங்கிங் நிறுவனத்தில் ஒரு வருட பி.ஜி டிப்ளமோ (பாங்கிங் & பைனான்ஸ்) சான்றிதழ் படிப்பில் சேர்ந்து முழுநேரமாக படிக்க வேண்டும். இந்தப் படிப்புக்கு தேவைப்படும் செலவை விண்ணப்பதாரர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வருடத்திற்கு தங்கும் வசதி, படிப்புக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கு 3.45 லட்சம் தேவைப்படும். 

கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு, வங்கியே லோன் வசதியையும் செய்து தருகிறது. 84 மாதங்களுக்குள் லோன் கட்டணத்தை திரும்பச் செலுத்திக் கொள்ளலாம். லோன் பணத்திற்கான வட்டி ஒரு வருடத்திற்கு 8 சதவிதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பை முடித்தவுடன் வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 

விண்ணப்பிப்பது எப்படி?

பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. 

பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்புறம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து பரோடா வங்கியின் இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன. 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
கடைசி தேதி: 02.07.2018

ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த
கடைசி தேதி: 02.07.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 28.07.2018

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com