பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக தேசிய அளவில் நடத்தப்படும் ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வின் ஆபிரகாம் உள்ளிட்ட 13 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிபெண்களை பெற்றுள்ளனர்.
ஜேஇஇ முதன்மை தேர்வுகளை எழுத சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பதிவுசெய்திருந்த நிலையில், தேர்வுகள் கடந்த 16ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 334 நகரங்களில் நடைபெற்றது. தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை நடத்தப்படுகின்றன. ஒரே மாணவர் நான்கு முறை வரை தகுதி தேர்வை எழுதலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்து ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்வுகளுக்கு பின்னர் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ஆபிரகாம் தகுதித் தேர்வில் 100 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.