கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜேஇஇ தேர்வு - மாணவர்கள் பங்கேற்பு
ஜேஇஇ மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று நடத்தப்படுகிறது.
கொரோனாத் தொற்று பரவலால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனைத்தொடர்ந்தும் கொரோனா பரவல் அதிகரித்ததால் 10-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனிடையே மத்திய அரசால் நடத்தப்படும் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட தேர்வுகளுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து விட்டது.
ஆகையால் ஐஐடி போன்ற பல்கலக்கழங்களில் படிப்பதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு நாடு முழுவதும் இன்று நடத்தப்படுகிறது. இத்தேர்வுகள் இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் ஜேஇஇ தேர்வு எழுத வந்த மாணவர்கள் சமூக இடைவெளியுடன் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு புது முகக் கவசம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.
தேர்வு எழுத வந்த மாணவர் பியூஸ் கூறும் போது “ தேர்வு அறையை அடைவதற்கு ஆட்டோ மற்றும் பேருந்து வசதிகள் இல்லை" என்று கூறினார். நீட் தேர்வு வரும் 13 ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது.