ஜே.இ.இ. தேர்வுகள் எழுதாமலேயே சென்னை ஐஐடியில் மாணவர்களை சேர்க்கும் திட்டத்தின் கீழ் பி.எஸ்சி பட்டப்படிப்பு தொடங்கியுள்ளது.
கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரும் ஜேஇஇ தேர்வு எழுதாமலேயே ஐஐடியில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் தொடங்கி, சிறு நகரங்கள், கிராமங்கள் வரை பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு பொருளாதார பின்னணி கொண்டவர்கள் இந்த பட்டப் படிப்பில் சேர்ந்துள்ளனர். சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 180-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100 சதவிகித கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க: திடீரென ரத்து செய்யப்பட்ட கால்நடை பராமரிப்புத்துறை நேர்காணல் - விண்ணப்பதாரர்கள் ஏமாற்றம்