கொரோனா பேரிடர் காலத்தில் தேர்வு அவசியமா? என்ன நினைக்கிறார்கள் மாணவர்கள்

கொரோனா பேரிடர் காலத்தில் தேர்வு அவசியமா? என்ன நினைக்கிறார்கள் மாணவர்கள்
கொரோனா பேரிடர் காலத்தில் தேர்வு அவசியமா? என்ன நினைக்கிறார்கள் மாணவர்கள்
Published on

கொரோனா நோய் பரவல் காரணமாக மத்திய அரசு சிபிஎஸ்இ மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ள நிலையில், தமிழக அரசு 12-ஆம் வகுப்பு தேர்வை நடத்தலாமா வேண்டாமா என கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கருத்தை கேட்டுள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்

"கொரோனா இரண்டாம் அலைமீது என்னோட கவனமெல்லாம் இருப்பதால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. வீட்டைவிட்டு வெளியே போனால் கொரோனா வந்துருமோ, தேர்வு மையத்திற்கு தேர்வெழுதச் சென்றால் கொரோனா பற்றிக் கொள்ளுமோ, நமக்கு கொரோனா வந்தால் அது வீட்டில் உள்ள பெற்றோருக்கும் பரவிவிடுமோ என்ற பயம் இருக்கிறது.

தேர்வை ரத்து செய்தால் நன்றாக இருக்கும். தேர்வு பயமெல்லாம் கிடையாது. ஆனால் நான் வெளியே சென்றால் என்னிடமிருந்து எனது பெற்றோருக்கு கொரோனா தொற்றிவிடுமோ என்ற பயம்தான். அதனால் தேர்வை ரத்து செய்துவிட்டு அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கினால் நன்றாக இருக்கும்." என்றார் மாணவர் ஒருவர்.

மற்றொருவர் கூறும்போது, “தேர்வெழுதுவதில் ஒன்றும் பயமில்லை. இப்பொழுது வைத்தால் கூட தேர்வை எழுதுவோம். ஆனால் மார்ச் மாசமே தேர்வை வைத்திருக்கலாம். தேர்வுத்தேதி தள்ளித்தள்ளி போவதாலும், தேர்வு வைப்பார்களா வைக்க மாட்டார்களா என்ற குழப்பத்தில் உள்ளதால் மனஉளைச்சலில் இருக்கிறோம்.” என்றார் மற்றொரு மாணவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com