“கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளி செல்லும் ஆர்வம் குறைந்திருக்கிறது” - நீதிமன்றம் கவலை

“கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளி செல்லும் ஆர்வம் குறைந்திருக்கிறது” - நீதிமன்றம் கவலை
“கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளி செல்லும் ஆர்வம் குறைந்திருக்கிறது” - நீதிமன்றம் கவலை
Published on

கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிக்கு செல்லும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்திருப்பதாக கவலை தெரிவித்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், கல்வியை தொடர்வதில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? என்பது குறித்து அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் டிஜிட்டல் முறையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்தி தர தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்யுமாறும் கோரப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் இம்மனு விசாரணைக்கு வந்த நிலையில், கொரோனா ஊரடங்குக்கு பின், பள்ளிக்கு செல்லும் ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்திருப்பதாக நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். வேலையிழப்பு, சொந்த ஊர் திரும்பியோரின் குழந்தைகள் படித்து வந்த அரசுப் பள்ளிகளில் மாற்றுச் சான்று பெறுவதில் சிக்கல் ஆகியவையும் இதற்கு காரணமா என நீதிபதிகள் கேட்டனர். இதையடுத்து அரசிடம் இது தொடர்பான தரவுகளை கேட்டு தெரிவிக்க அவகாசம் வழங்குமாறு அரசு தரப்பில் வழக்கறிஞர் கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், அன்றயை தினம் மாணவர்கள் கல்வியை தொடர வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கிறதா என்பதை அரசு தரப்பில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com