பொறியியல் படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை!

பொறியியல் படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை!
பொறியியல் படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை!
Published on

இந்திய கடற்படையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் பணிபுரிவதற்கு, 121 காலிப்பணியிடங்களுக்கு ஜூன்-2020 பயிற்சியுடன் கூடிய வேலைக்கான இந்தியன் நேவி எண்டரன்ஸ் தேர்வு (INET) பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் வாய்ந்த, திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் போன்ற இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

பணி: 
எக்சிகியூடிவ் பிரிவு பணி 
டெக்னிக்கல் பிரிவு பணி 
எஜூகேஷன் பிரிவு பணி 

காலிப்பணியிடங்கள்: 
எக்சிகியூடிவ் பிரிவு பணி = 55
டெக்னிக்கல் பிரிவு பணி = 48
எஜூகேஷன் பிரிவு பணி = 18

மொத்தம் = 121 காலிப்பணியிடங்கள்

பயிற்சி காலம்: 22 வாரங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 18.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.05.2019
INET - நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி: ஆகஸ்ட் - 2019.

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 19 1/2 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
02.07.1995 முதல் 01.01.2001-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
எஜூகேஷன் பிரிவு பணிக்கு மட்டும் 02.07.1995 முதல் 01.01.1999-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.205
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, பி.இ / பி.டெக் / எம்.சி.ஏ / எம்.எஸ்.சி பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்று குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

குறிப்பு:
10, 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
கடைசி வருடம் பி.இ / பி.டெக் பட்டப்படிப்பில் பயின்று கொண்டிருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், www.joinindiannavy.gov.in/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யும் முறை:
எஸ்.எஸ்.பி மூலம் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என்ற இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நுண்ணறிவுத் திறன், கலந்துரையாடல், உளவியல் தேர்வு, குழு தேர்வு, நேர்க்காணல் போன்ற தேர்வு முறைகள் நடைபெறும்.

INET - நுழைவுத்தேர்வு முறை:
100 கேள்விகள், 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டு 2 மணி நேரத்தில் முடிவடையும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

பதவி உயர்வு:
பயிற்சிக்கு பின் சப்-லெப்டினன்ட் முதல் கமாண்டர் பதவி வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற வாய்ப்புண்டு.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, https://www.joinindiannavy.gov.in/files/event_attachments/INET_OFFICER_ADV_JUN2020_final.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com