இந்திய கடலோர காவல்படையில் வேலை ? - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை

இந்திய கடலோர காவல்படையில் வேலை ? - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை
இந்திய கடலோர காவல்படையில் வேலை ? - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை
Published on

இந்திய கடலோர காவல்படை பணிக்கு பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. இந்திய கடலோர காவல்படை Navik (General duty) பணிக்கு பயிற்சி பெறுவதற்கான நுழைவுத்தேர்வுகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : Navik (General duty)

முக்கிய தேதிகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 21.01.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019, மாலை 05.00 மணிக்குள்
தேர்வு நடைபெறும் காலம் : மார்ச் / ஏப்ரல் - 2019.

2. கல்வித்தகுதி :
+2வில் கணிதம் மற்றும் இயற்பியலை பாடமாக கொண்டு, மத்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், குறைந்தபட்சமாக 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விளையாட்டு வீரர்களுக்கு தனி சலுகை உண்டு.

3. வயது :

18 வயது முதல் 22 வயது வரை.

01.08.1997 முதல் 31.07.2001 க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதில் தளர்வு உண்டு.

4. மருத்துவ தகுதிகள் :

உயரம் :                          குறைந்தபட்சம் 157 செ.மீ 
மார்பளவு :                      இயல்பு அளவுடன் 5 செ.மீ விரியும் திறனும் வேண்டும். 
உடல் எடை:                 வயதிற்கேற்ற சரிவிகித அளவு. +-10% ஏற்றுக்கொள்ளப்படும்.
செவித்திறன் :               இயல்பான அளவு இருத்தல் வேண்டும்.
கண்பார்வை :                சிறந்த கண் எனில் 6/6, மோசமான கண் எனில் 6/9 இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்திருக்கக்கூடாது.
குறிப்பு :                          உடம்பில் எந்த பகுதியிலும் பச்சைக்குத்தி இருக்கக்கூடாது. 

5. தேர்வு செய்யப்படும் முறைகள் :

மூன்று கட்ட தேர்வு முறைகள் உண்டு. எழுத்து தேர்வு, உடல் மற்றும் உடற்பயிற்சி சோதனை தேர்வு. இறுதியில் மருத்துவ பரிசோதனை போன்றவைகள் நடைபெறும்.

6. சம்பளம் :

தேர்வுகளில் வெற்றிபெற்று பணியில் சேரும் நபர்களுக்கு தொடக்க ஊதியமாக ரூ.21,700 ரூபாய் வழங்கப்படும். அத்துடன் கூடுதல் மதிப்பீட்டு உதவித் தொகைகளும் உண்டு.

7. கட்டாயம் :

தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

8. அடுத்த கட்டம் :

பிற்காலத்தில் பதவி உயர்வு அடைவோர், தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ரூ.47,600 ஊதியமாகக் கிடைக்கும். 

மேலும் தெளிவான மற்றும் விரிவான தகவல்களுக்கு  http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_37_1819b.pdf- என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com