“ஓர் ஆண்டிற்குள் வேலை இழந்தவர்கள் 1 கோடி” - சிஎம்ஐஇ அறிக்கை

“ஓர் ஆண்டிற்குள் வேலை இழந்தவர்கள் 1 கோடி” - சிஎம்ஐஇ அறிக்கை
“ஓர் ஆண்டிற்குள் வேலை இழந்தவர்கள் 1 கோடி” - சிஎம்ஐஇ அறிக்கை
Published on

கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 1 கோடியே 10 லட்சம் பேர் வேலையிழந்தது தெரியவந்துள்ளது.

நாட்டில் நிலவும் வேலை தட்டுப்பாடு என்பது, எப்போதுமே இளைஞர்கள் மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் பெரும் வருத்தம் தரும் செய்தியாகவே உள்ளது. இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 1 கோடியே 10 லட்சம் பேர் வேலையிழந்தது தெரியவந்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடியவர்கள் அதிப்படியான அளவில் வேலையிழந்தது தெரியவந்திருக்கிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் வேலையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 407.9 மில்லியன். ஆனால் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 397 மில்லியனான குறைந்துள்ளது. அதாவது கடந்த ஒரு வருடத்தில் 10.9 மில்லியன் பேர் (1.1 கோடி) வேலையிழந்தது தெரியவந்துள்ளது.

நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்கள் ஆகிய இரண்டிலுமே மக்கள் வேலையிழந்துள்ளனர். இருந்தாலும் கிராமப்புறங்களில் அதிகப்படியான மக்கள் வேலையிழந்தது தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் 9.1 மில்லியன் மக்கள் இந்திய கிராமப்புறங்களில் வேலையிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புறங்களில் 1.8 மில்லியன் மக்கள் வேலையிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டில் மட்டும் 84 சதவீத வேலையிழப்பு கிராமப்புறங்களில் இருந்தது தெரியவந்துள்ளது.

பெண்கள் அதிகளவில் பாதிப்பு

கடந்த ஓராண்டில் 11 மில்லியன் மக்கள் வேலையிழந்துள்ள நிலையில் அதில் 8.8 மில்லியன் பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. வெறும் 2.2 மில்லியன் ஆண்களே கடந்த ஓராண்டில் வேலையிழந்துள்ளனர். அதேசமயம் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஆண்களில் 5 லட்சம் பேர் புதிதாக கடந்த ஓராண்டு வேலையில் சேர்ந்துள்ளனர். 

ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் 2.3 மில்லியன் ஆண்கள் கடந்த ஓராண்டில் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். மாதாந்திர சம்பளம் வாங்குபவர்களில் 3.7 மில்லியன் பேர் கடந்த ஓராண்டில் வேலையிழந்தது தெரியவந்துள்ளது. அதேசமயம் 40 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலும் யாரும் தங்களது வேலையை இழக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனிடையே பணிமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் வேலைவாய்ப்பு பெரும் பின்னடைவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 7.4 சதவீதமாக உள்ளது. கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவு இது அதிகம் ஆகும் என்பது குறிப்பிடத்தகக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com