மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி-க்கு முதலிடம் கிடைத்திருக்கிறது.
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும்பொருட்டு, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய தரத்தை உயர்த்த வேண்டுமென்ற நோக்கில், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் கடந்த 2016 தொடங்கி தற்போதுவரை ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இவ்வருடத்துக்கான இப்பட்டியலை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.
இப்பட்டியலில் சிறந்த மருத்துவக்கல்லூரிகள் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதலிடமும், வேலூர் சிஎம்சி 3-வது இடமும் பிடித்துள்ளன. நாட்டின் சிறந்த பல்கலைக்கழக தரவரிசையில் கோவை அமிர்தா விஸ்வ சத்யாபீடம் பல்கலைக்கழகம் 4-வது இடத்தை பெற்றுள்ளது. அதேபோல சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் சென்னை லயோலா கல்லூரி 3-வது இடத்தில் உள்ளது.