உயர்கல்வி நிலையங்களின் தரவரிசைப் பட்டியல்... ஐஐடி சென்னை முதலிடம்

உயர்கல்வி நிலையங்களின் தரவரிசைப் பட்டியல்... ஐஐடி சென்னை முதலிடம்
உயர்கல்வி நிலையங்களின் தரவரிசைப் பட்டியல்... ஐஐடி சென்னை முதலிடம்
Published on

இந்திய அளவில் புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் சாதனை நிகழ்த்தும் உயர்கல்வி நிலையங்களுக்கான அடல் தரவரிசைப்பட்டியலை (ARIIA) குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வெளியிட்டார். அதில் ஐஐடி சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மும்பை ஐஐடி மற்றும் மூன்றாவது இடத்தை டெல்லி ஐஐடி பெற்றுள்ளன.

மத்திய கல்வி அமைச்சகமும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலும் இணைந்து அடல் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகினறன. புதுமையான கண்டுபிடிப்புகளில் சாதனை நிகழ்த்தும் கல்வி நிலையங்கள் தரவரிசை செய்யப்படுகின்றன. சென்ற ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 674 உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் பங்கேற்றுள்ளன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்களில் மகாராஷ்டிராவின் இன்ஸ்டிட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி முதலிடம் பெற்றுள்ளது. தனியார் மற்றும் சுயநிதி கல்விநிறுவனங்களின் தரவரிசையில் ஒடிசாவின் கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி முதலிடமும் சென்னை எஸ்ஆர்எம் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இரண்டாவது இடமும் வேலூர் விஐடி மூன்றாவது இடமும் பெற்றுள்ளன.

மகளிருக்கான உயர்கல்வி நிறுவனங்களில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அவினாசிலிங்கம் இன்ஸ்டிட்யூட் முதலிடத்தையும் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி மகளிர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com