ஐடிபிஐ வங்கியில், ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் என்ற துறையின் கீழ் பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
ஜெனரல் மேனேஜர் (GM)
துணை ஜெனரல் மேனேஜர் (DGM)
உதவி ஜெனரல் மேனேஜர் (AGM)
மேனேஜர்
காலிப்பணியிடங்கள்:
ஜெனரல் மேனேஜர் (GM) - 01
துணை ஜெனரல் மேனேஜர் (DGM) - 06
உதவி ஜெனரல் மேனேஜர் (AGM) - 36
மேனேஜர் - 77
மொத்தம் = 120 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 18.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2019
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 15.05.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 30.04.2019
தேர்வுக்கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.150
மற்ற பிரிவினர்களுக்கான தேர்வுக்கட்டணம் - ரூ.700
குறிப்பு:
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த இயலும்.
செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எந்தவொரு காரணம் கொண்டு மீண்டும் திரும்பப் பெற முடியாது.
வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 25 வயது வரையும், அதிகபட்சமாக 40 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
பணிகளுக்கேற்றவாறு வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.
ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.31,705 முதல் அதிகபட்சமாக ரூ.58,400 வரை மாதசம்பளமாக வழங்கப்படலாம்.
பணிகளுக்கேற்றவாறு ஊதியத்தில் மாற்றங்கள் உண்டு.
கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பையோ அல்லது B.E / B.Tech / M.B.A / M.C.A போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பையோ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாது வங்கித்துறை சார்ந்த பணி அனுபவமும், கம்யூட்டர் சம்பந்தமான அடிப்படை அறிவும் அவசியம்.
குறிப்பு:
பணிகளுக்கேற்றவாறு கல்வித்தகுதியிலும், பணி அனுபவத்திலும் மாற்றங்கள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://ibpsonline.ibps.in/idbibsoapr19/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
மேலும், இது குறித்த முழு தகவல்களைப்பெற,
https://www.idbi.com/pdf/careers/DetailedAdvertisement-Specialists2019-Mar2019-.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.