குஜராத் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் நிர்ணயித்த மதிப்பெண்களை விட கூடுதல் மதிப்பெண்கள் எடுத்திருப்பது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
குஜராத் மாவட்டம் காரசானா கிராமத்தில் உள்ள ஜலோத் தாலுகாவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவி வன்ஷிபென் மனிஷ்பாய். இவர் கணிதத்தில் 200/212, குஜராத்தி மொழி பாடத்தில் 200/211 என்று நிர்ணயிக்கப்பட்ட மொத்த மதிப்பெண்களை விட அதிகமாக பெற்றுள்ளது, சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் தரமான பள்ளி என்ற கருத்துக்கள் சூழ்ந்துள்ள நிலையில், நிர்ணயித்த மதிப்பெண்ணுக்கு மேல் மாணவி மதிப்பெண் பெற்றுள்ளது மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும் இத்தகைய பள்ளியில் வழங்கப்படும் கல்வியின் தரம் குறித்தும் கவலையை எழுப்பியுள்ளது.
சமூக வலைதங்களிலும் இந்த மதிப்பெண் ஷீட்டை பயன்படுத்தி பலரும் கலாய்த்து வருகிறார்கள். பல கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள்.