டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-4 தேர்வுக்கான காலியிடங்கள் மற்றும் அத்தேர்வு பற்றிய கூடுதல் தகவல்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வி.ஏ.ஒ, ஜூனியர் அசிஸ்டெண்ட், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இன்று (ஜூன் 14) முதல் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து, ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ)
2. ஜூனியர் அசிஸ்டெண்ட் (Junior Assistant)
3.பில் கலெக்டர் (Bill Collector)
4. தட்டச்சர் (Typist)
உள்ளிட்ட பல்வேறு பணிகள்
மொத்த காலியிடங்கள் = 6,491
முக்கிய தேதிகள்:
நாளிதழில் அறிவிப்பாணை வெளியான தேதி: 07.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 14.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.07.2019
வங்கியில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 16.07.2019
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 01.09.2019
கட்டணம்:
1. நிரந்தரப் பதிவுக்கட்டணம்: ரூ.150
2. தேர்வுக்கட்டணம்: ரூ.100
வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
* கிராம நிர்வாக அலுவலர் பணிகள்:
1. எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் போன்றோர்களுக்கு குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 40 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.
2. மற்ற பிரிவினருக்கு, குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.
*வி.ஏ.ஒ தவிர மற்ற பணிகளுக்கான வயது வரம்பு:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் போன்றோர்களுக்கு குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.
2. பி.சி / எம்.பி.சி பிரிவினர் போன்றோர்களுக்கு குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 32 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.
3. மற்ற பிரிவினருக்கு, குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.19,500 முதல் அதிகபட்சமாக ரூ.65,500 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளி கல்வி படிப்பில் தேர்ச்சி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
1. தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கு மட்டும் கூடுதலாக அரசு தொழில்நுட்பத் தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்) மற்றும் சுருக்கெழுத்துத் (தமிழ், ஆங்கிலம்) தேர்வு இரண்டிலும் தேர்ச்சிபெற்றிருத்தல் அவசியம்.
2. தமிழ் வழிக்கல்வி அல்லது போதுமான தமிழறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.tnpsc.gov.in அல்லது www.tnpsc.exams.net அல்லது www.tnpsc.exams.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு முறை மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வானது 3 மணி நேர கால அளவில் 300 கேள்விகள் கேட்கப்படும்.
மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற http://www.tnpsc.gov.in/Notifications/2019_19_ccse4-notfn-tamil.pdf அல்லது http://www.tnpsc.gov.in/Notifications/2019_19_ccse4-notfn-eng.pdf- என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.