'2020-2021-ல் தேர்வான பட்டதாரிகள் தகுதியில்லை': எச்டிஎப்சி வங்கியின் விளம்பரத்தால் சர்ச்சை

'2020-2021-ல் தேர்வான பட்டதாரிகள் தகுதியில்லை': எச்டிஎப்சி வங்கியின் விளம்பரத்தால் சர்ச்சை
'2020-2021-ல் தேர்வான பட்டதாரிகள் தகுதியில்லை': எச்டிஎப்சி வங்கியின் விளம்பரத்தால் சர்ச்சை
Published on

2020-2021-ஆம் ஆண்டு படித்து முடித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பிற்கு தகுதி இல்லை என்ற எச்டிஎப்சி வங்கியின் அறிவிப்பால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

எச்டிஎப்சி வங்கி நிறுவனத்தின் கிளைகளான மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் பணிபுரிவதற்க்காக பட்டதாரிகள் தேவை என இவ்வங்கி நிறுவனத்தின் மற்றொரு கிளையான மதுரை விளாங்குடி கிளை சார்பில் செய்தி தாள்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அதில், 2020-2021 கல்வி ஆண்டில் தேர்வானவர்கள் வங்கியில் பணிபுரிய தகுதி இல்லை என குறிப்பிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்வி ஆண்டில் இறுதித் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற நிலையில், மாணவர்களின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது.

இது குறித்து வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது 2020-21 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களிடம் சான்றிதழ் முழுமையாக கிடைத்திருக்காது என்பதால் அவர்களுக்கு இந்த நேர்முக தேர்வில் வாய்ப்பு அளிக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com