தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.
சேலத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர் துணைவேந்தர்கள் கல்விசார் பணிகளில் அதிக கவனம் செலுத்தும் வகையில் அவர்களின் நிர்வாகப் பணிச் சுமைகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழ்களில் புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகியவை இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் கால அளவை 40 முதல் 45 நாட்கள் என்ற அளவிலிருந்து 30 நாட்களாக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.