2001-2002 கல்வியாண்டு முதலான பொறியியல் மாணவர்கள் அரியர் தேர்வெழுத அனுமதி! விவரம் உள்ளே

2001-2002 கல்வியாண்டு முதலான பொறியியல் மாணவர்கள் அரியர் தேர்வெழுத அனுமதி! விவரம் உள்ளே
2001-2002 கல்வியாண்டு முதலான பொறியியல் மாணவர்கள் அரியர் தேர்வெழுத அனுமதி! விவரம் உள்ளே
Published on

2001-2002 கல்வியாண்டு முதல், பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதி வழங்கியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

2001-2002ஆம் கல்வியாண்டிற்கு பிறகு படித்த மாணவர்கள் 3-ஆவது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால், நடைபெறவுள்ள செம்ஸ்டர் தேர்வில் தேர்வெழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கட்டணத்துடன் ரூ.5,000 கூடுதலாக செலுத்த வேண்டும்.



இந்த தேர்வுக்கு www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் நவம்பர் 23- ஆம் தேதி முதல் டிசம்பர் 3 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ள 9 தேர்வு மையங்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். 'தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை- 25' என்ற பெயரில் வரைவோலை அல்லது ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம்.



மேலும் அரியர் தேர்வு எழுதவுள்ள பாடங்களை மாணவர்கள் விண்ணப்பித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com