“இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடு தொடரும்” - உச்சநீதிமன்றம் கேள்வி

“இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடு தொடரும்” - உச்சநீதிமன்றம் கேள்வி
“இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடு தொடரும்” - உச்சநீதிமன்றம் கேள்வி
Published on

மராத்தா ஒதுக்கீடு வழக்கு விசாரணையின் போது, வேலைகள் மற்றும் கல்வியில் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடு தொடரும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

வேலைகள் மற்றும் கல்வியில் இன்னும் எத்தனை தலைமுறைகள் இடஒதுக்கீடு தொடரும் என்று, மராட்டிய இடஒதுக்கீடு வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஒட்டுமொத்த 50 சதவீத வரம்பை நீக்க வேண்டுமானால், அதன் விளைவாக ஏற்படும் ஏற்றத்தாழ்வு குறித்து கவலைகளையும் இந்த அமர்வு எழுப்பியது.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், மாநிலங்கள் பல நன்மை பயக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா என்றும் உச்சநீதிமன்ற கூறியது.

நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச்சில், மகாராஷ்டிராவுக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான மண்டல் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடுமையாகக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com