நீட் தேர்வு: இந்திய அரசுப் பள்ளி மாணவர்களில் தமிழக மாணவர் முதலிடம்!

நீட் தேர்வு: இந்திய அரசுப் பள்ளி மாணவர்களில் தமிழக மாணவர் முதலிடம்!
நீட் தேர்வு: இந்திய அரசுப் பள்ளி மாணவர்களில் தமிழக மாணவர் முதலிடம்!
Published on

இன்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில், பெரியகுளம் அருகிலுள்ள சில்வார்பட்டி அரசு மாதிரிப் பள்ளி மாணவர் ஜீவித்குமார், இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளி நாராயணசாமி என்பவரின் மகனான அவர், 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் தனியார் பயிற்சி மையத்தில் ஓர் ஆண்டாகப் பயிற்சி பெற்ற ஜீவித்குமார், முதல் மதிப்பெண் பெற்று அரசுப் பள்ளி மாணவர்களால் சாதிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். புதிய தலைமுறையிடம் பேசிய அவர், " 2018 -19 கல்வியாண்டில் பிளஸ் டூ படித்து முடித்தேன். ஓர் ஆண்டாக, ஆசிரியர்களின் உதவியுடன் தனியார் பயிற்சி மையத்தில்தான் படித்தேன். அரசுப் பள்ளி மாணவர்களால் முடியாதது என்பது கிடையாது" என்றார்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஸ்ரீஜன், இந்திய அளவில் நீட் தேர்வில் 710 மதிப்பெண்கள் பெற்று எட்டாவது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்திருக்கிறார். இந்தியா முழுவதும் 7.7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர்.

99.99 சதவீத மதிப்பெண்கள் பெற்று ஒடிசா மாணவர் சோயப் அப்தாப் என்ற மாணவர் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். நீட் தேர்வில் 57.44 சதவிகிதம் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை சுமார் 13 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com