கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதாக அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2015-16 முதல் 2019-20 ஆம் கல்வியாண்டு வரை 5 ஆண்டுகளில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 18 புள்ளி 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலக் கட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை 11 புள்ளி 4 சதவீதமே அதிகரித்துள்ளது. கடந்த 2014-15ஆம் ஆண்டில் 1 புள்ளி 17 லட்சமாக இருந்த முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 2019-20ஆம் கல்வியாண்டில் 2 புள்ளி 3 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.