டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு அப்ரெண்டிஸ் பயிற்சி!

டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு அப்ரெண்டிஸ் பயிற்சி!
டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு அப்ரெண்டிஸ் பயிற்சி!
Published on

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், உத்யோக்மண்டலில் உள்ள - ’த ஃபெர்டிலைஸர் & கெமிக்கல் திருவான்கூர் லிமிடெட்’ நிறுவனத்தில், டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு, 155 காலிப்பணியிடங்களுக்கு, உதவித்தொகையுடன் கூடிய ஒரு வருட அப்ரெண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : 
1. டெக்னீசியன் (Technician) அப்ரெண்டிஸ் -  57 
2. டிரேட் (Trade) அப்ரெண்டிஸ் - 98 

பயிற்சிக்கான கால அளவு: 
1. டெக்னீசியன் (Technician) அப்ரெண்டிஸ் - ஒரு வருடம் (உதவித்தொகை - மாதம் 8,000 ரூபாய்)
2. டிரேட் (Trade) அப்ரெண்டிஸ் - ஒரு வருடம் (உதவித்தொகை - மாதம் 6,018 முதல் 6,770 ரூபாய் வரை).

முக்கிய தேதிகள்:
பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.01.2019

வயது வரம்பு:
(01.01.2019 க்குள்) 23 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் பிறந்த தேதி 02.01.1996 அல்லது அதற்கு பிறகு பிறந்தவராகவும், ஓபிசி பிரிவினர் 02.01.1993 அல்லது அதற்கு பிறகு பிறந்தவராகவும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 02.01.1991 அல்லது அதற்கு பிறகு பிறந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி:
1. டெக்னீசியன் (Technician) அப்ரெண்டிஸ்:
3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை, கெமிக்கல், கம்பியூட்டர், சிவில், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமெண்டேசன், இன்ஸ்ட்ரூமெண்ட் டெக்னாலஜி, மெக்கானிக்கல் போன்ற துறையில் பயின்றவராகவும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், பொதுப் பிரிவினர் - 60%, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - 50% மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டயம் பெற்றிருத்தல் வேண்டும்.
 
2. டிரேட் (Trade) அப்ரெண்டிஸ்: 
ஐடிஐ சான்றிதல் படிப்பை, ஃபிட்டர், மெசினிஸ்ட், எலக்ட்ரீசியன், பிளம்பர், பெயிண்டர்,கார்பெண்டர், மெக்கானிக் போன்ற துறைகளில் பயிற்சி முடித்தவராகவும், பொதுப் பிரிவினர் - 60%, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - 50%, மதிப்பெண்களுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:
முதலில் விண்ணப்பிப்போர் www.fact.co.in - என்ற இணையத்தளத்திற்கு சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை தகுந்த சான்றிதழ்களோடு பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும் முழுமையான தகவல்களுக்கு,
http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Careers_training/APPRENTICESHIP/Adv%20English%20Trade%20%26%20Dipl%202019-20%281%29_14jan019.pdf - என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com