நாட்டில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தலின்படி, பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்குத் தொடங்கி மதியத்திற்குள் நடத்தி முடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காலையில் நடத்தப்படும் வழிபாட்டை, நிழலாக உள்ள பகுதியில் நடத்த வேண்டும், வெளி விளையாட்டுகளும் காலையிலேயே நடத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கப்பட்டுள்ளன.
இதே போன்று வகுப்பறைகள் காற்றோட்டமாக உள்ளதா?, மின்விசிறி செயல்படுகிறதா? உள்ளிட்டவற்றை உறுதி செய்ய மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. முடிந்தவரை மாணவர்களை பெற்றோர்களே பள்ளிக்கு அழைத்து வருமாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.