TET 2022: தேர்வு தேதி, காலி பணியிடம் தொடர்பான முழு விவரம்

TET 2022: தேர்வு தேதி, காலி பணியிடம் தொடர்பான முழு விவரம்
TET 2022: தேர்வு தேதி, காலி பணியிடம் தொடர்பான முழு விவரம்
Published on

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 பணியிடங்களுக்கு டிசம்பரில் தேர்வு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில், `தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 01/2022, நாள் 07/03/2022 அன்று வெளியிடப்பட்டது. அதில் இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினி வழித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள் - 1க்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம், பின்வரும் படத்தில்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com