நீட் தேர்வில் தொடரும் குளறுபடி - திட்டமிட்டு அலைக்கழிக்கப்படுகிறார்களா தமிழக மாணவர்கள் !

நீட் தேர்வில் தொடரும் குளறுபடி - திட்டமிட்டு அலைக்கழிக்கப்படுகிறார்களா தமிழக மாணவர்கள் !
நீட் தேர்வில் தொடரும் குளறுபடி - திட்டமிட்டு அலைக்கழிக்கப்படுகிறார்களா தமிழக மாணவர்கள் !
Published on

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு என்.டி.ஏ மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. அத்தேர்வை எழுதவுள்ள தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை www.ntaneet.nic.in  என்ற ஆன்லைன் மூலம் கொடுக்கப்பட்டு தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டன.   

இந்நிலையில் தவிர்க்கமுடியாத காரணத்தினால் மதுரை மாவட்டத்தில் உள்ள சில தேர்வுமையங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நீட் தேர்வு மையமாக தற்போதும் செயல்படுகிறது. 

தேர்வு மைய எண்: 411309. இந்த மையத்தில்  வரிசை எண்: 410608041 முதல் 410608640 வரை தேர்வு எழுதும் 600 மாணவர்கள் மதுரையில் உள்ள தேர்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மற்ற வரிசை எண்: 411305461 முதல் 411305940 வரை உள்ள மாணவர்கள் தேர்வினை புஷ்பலதா மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதில் மொத்தம் 480 மாணவர்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீதமுள்ள நீட் தேர்வு மையங்களில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. 

தேர்வு எழுதுபவர்களின் வரிசை எண்கள்: 410602881 முதல் 410603660 வரை உள்ளவர்களுக்கு மதுரை விரகனூர், வேலம்மாள் நகரில் உள்ள மதுரை - ராமேஸ்வரம் உயர்நிலைப்பள்ளியை தேர்வு மையமாக ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விரகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரிசை எண்கள் 410608041 முதல் 410608640 வரை உள்ளவர்களுக்கு திருநெல்வேலி தியாகராஜா நகரில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரை அ.வளையப்பட்டி அழகர் கோவிலில் உள்ள பாண்டுகுடி ஸ்ரீலட்சுமி நாராயணா வித்யாலயா பள்ளிக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது.

வரிசை எண்கள் 410611401 முதல் 410611880 வரை உள்ளவர்களுக்கு மதுரை எண்.1 நரிமேட்டில் உள்ள PT ராஜன் சாலையில் அமைந்துள்ள கேந்த்ரியா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரிசை எண்கள் 410611881 முதல் 410612360 வரை உள்ளவர்களுக்கு மதுரை P&T நகர் எக்ஸ்டன்சன் மைக்கேல் காட்டன் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை எய்ம்ஸ் ரோடு, தனபாண்டியன் நகரில் அமைந்துள்ள தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரிசை எண்கள் 410612841 முதல் 410613320 வரை உள்ளவர்களுக்கு மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கேந்திரியா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை R.S.எண்.134, GST ரோடு, திருநகர் 3-வது நிறுத்தம் அருகேயுள்ள CS ராமசாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் வரிசை எண்கள் 410616201 முதல் 410616560 வரை உள்ளவர்களுக்கு ஏற்கெனவே மதுரை பாபா பில்டிங், ராஜ்ஸ்ரீ கார் கேரில் உள்ள கோபால கிருஷ்ண நகரில் அமைந்துள்ள மகாத்மா மான்டசெரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை நாகமலை மேற்கு, மேலகுயில்குடி சாலையில் அமைந்துள்ள எஸ்.பி.ஓ.ஏ பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் புதிய தேர்வு மையங்களின் அமைவிடத்தை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொண்டு, கடைசி நேர இடர்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வின் போது தமிழக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

மேலும் , www.ntaneet.nic.in - என்ற இணையதளத்தில் சென்று,  தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ள மாணவர்கள் அதற்கான புதிய ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com