இபிஎஃப்ஓ (EPFO) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், அசிஸ்டெண்ட் பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
அசிஸ்டெண்ட் பணி
மொத்த காலியிடங்கள்: 280
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 30.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2019
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய கடைசி தேதி: 10.07.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 25.06.2019
வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 20 வயது பூர்த்தி அடைந்தவர்களும், அதிகபட்சமாக 27 வயது நிரம்பாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வுக்கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் / துறையில் பணிபுரிவோர் / EWS - ரூ.250
மற்ற பிரிவினர் / ஆண்கள் - ரூ.500
ஊதியம்:
தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவோர்க்கு, ரூ.44,900 தொடக்க மாத ஊதியமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://ibpsonline.ibps.in/epfoamay19/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு முறைகள்:
1. முதல் நிலை தேர்வு
2. முதன்மை தேர்வு போன்ற இரு தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Updates/Exam_RR_Assistan_51.pdf & https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Updates/Add-Exam_RR_Assistan_51.pdf -என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.