பொறியியல் படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்க் கல்வித்துறை அறிவிப்பு

பொறியியல் படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்க் கல்வித்துறை அறிவிப்பு
பொறியியல் படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்க் கல்வித்துறை அறிவிப்பு
Published on

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்க் கல்வித்துறை அறிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியான நிலையில் உயர்க் கல்விக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளன. இதன்படி பொறியியல் படிப்புக்கு இன்று முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேண்டம் என் ஆகஸ்ட் 25 ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை சிறப்பு இடஒதுக்கீடு பிரிவில் இடம் பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

பின்னர் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலும் துணை கலந்தாய்வு அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலும், ஆதிதிராவிடர் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com