பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுப் பதிவு : இன்று மாலை முதல் தொடக்கம்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுப் பதிவு : இன்று மாலை முதல் தொடக்கம்
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுப் பதிவு : இன்று மாலை முதல் தொடக்கம்
Published on

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான விவரங்கள் தொடர்பாக அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர்கூறும்போது, இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை ஆன்லைனில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம் என்றார். இதற்காக மாணவர்கள் www.tneaonline.com என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

சான்றிதழ் சரிபார்க்க முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் நேரில் வர வேண்டாம் எனவும், ஆன்லைன் மூலம் சான்றிதழ் சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சான்றிதழ்களை சரிபார்க்க தமிழகம் முழுவதும் 52 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை மாணவர்கள் அசல் சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம் எனவும் தெரிவித்தார். 

அத்துடன் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் பொறியியல் கவுன்சிலிங் நடைபெறும் எனவும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் சேர்க்கை குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் எனவும் குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகள் உள்ளன என்று கூறிய அமைச்சர், மொத்த இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். கல்லூரிகள் கொரோனா தனிமை முகாம்களாக இருப்பதால் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்ற அவர், கலை, அறிவியல் படிப்புகள் குறித்து 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com