பொறியியல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பொறியியல் கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
Published on

தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக் கழகம் / சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் 2019-2020 ஆம் கல்வியாண்டில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலாமாண்டு பி.இ / பி.டெக் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2019 க்கான கலந்தாய்வுக்கு நாளை முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க தொடங்கலாம்.

முக்கிய தேதிகள்:
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு - 2019:
தற்காலிக அறிவிப்பு வெளியான தேதி - 21.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் - 02.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் - 31.05.2019
ரேண்டம் எண் வெளியிடும் நாள்: 03.06.2019
தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்: 17.06.2019
(Vocational) நேரில் கவுன்சிலிங் துவங்கும் நாள்: 25.06.2019
(Vocational) நேரில் கவுன்சிலிங் முடியும் நாள்: 28.06.2019
(Academic) ஆன்லைனில் கவுன்சிலிங் துவங்கும் நாள்: 03.07.2019
(Academic) ஆன்லைனில் கவுன்சிலிங் முடியும் நாள்: 28.07.2019
ஒட்டுமொத்த கலந்தாய்வு முடியும் நாள்: 30.07.2019

கல்வித்தகுதி :
12 ஆம் வகுப்பில் கணிதம்,  இயற்பியல்,  வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளை பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பதிவுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மற்றும் வங்கிகள் மூலமாக தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.

வங்கிகள் மூலம் பதிவுக்கட்டணம் செலுத்துவோர் நினைவில் வைக்க வேண்டியவை:
‘The Secretary, TNEA’ Payable at Chennai, என்ற பெயரில் 01.05.2019 -க்கு பிறகு பெற்ற வரைவோலை மூலமாக பதிவுக்கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக சமர்ப்பிக்கலாம்.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் (TNEA) சென்னையில் மட்டும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், www.tneaonline.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பதாரரின் பெயர், இமெயில் ஐடி, தொலைபேசி எண், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான வேண்டுதல், பதிவுக்கட்டணம், ஆதார் விவரங்கள்,பெற்றோர் ஆண்டு வருமானம், பள்ளி விவரங்கள், 12 ஆம் வகுப்பு தேர்வு எண், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்றவை

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, www.tneaonline.in - என்ற இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com