தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தேர்வு செப்டம்பர் 21 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தொடக்கக்கல்வி டிப்ளமோ தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ் நகல்களை இணைத்து அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணம்
ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 50. மதிப்பெண் சான்றிதழ் முதலாமாண்டு-ரூ. 100. மதிப்பெண் சான்றிதழ் இரண்டாம் ஆண்டு-ரூ. 100. பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ. 15. இந்த வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் ரூ. 1000 கூடுதல் கட்டணம் செலுத்தி ஆகஸ்ட் 28, 29 ஆம் தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அஞ்சல் வழியில் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க வரும் மாணவர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்: ஆகஸ்ட் 25, 26, 27
விவரங்களுக்கு: www.dge.tn.gov.in