அவ்வாறு ஆராய்சிக்காக பூமியில் இடப்பட்ட ஆழமான துளையான கோலா சூப்பர் டீப் சுமார் 12.26 கிலோமீட்டர் தூரத்திற்கு துளையிடப்பட்டது. இதற்கே 20 ஆண்டுகள் ஆய்வாளருக்கு தேவைப்பட்டது என்கிறார்கள். அவ்வாறு துளையிட்டபோது 6000 டிகிரி செல்சியஸ் வெப்பம், பூமியின் மேற்பரப்பை விட 30 கோடி மடங்கு அதி அழுத்தம் ஆகியவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும் என அவர்களின் ஆய்வில் தெரியவந்ததால் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டிருந்தனர். இருந்தாலும் அவர்களின் ஆய்வு தற்பொழுது வரை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது.
இது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் சியாடோங் சாங் மற்றும் யி யாங் ஆகியோர், உள் மையத்தின் சுழற்சி "2009 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு பின்னர் எதிர் திசையில் திரும்பியது" என்று கண்டறிந்து கூறி வருகிறார்கள். இவர்கள் பூமியைப்பற்றி கூறும் பொழுது, "பூமியின் மேற்பரப்புடன் அதன் உள்மையத்தை ஒப்பிடும்போது உள் மையமானது முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சலைப் போல சுழல்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். ஊஞ்சலின் ஒரு சுழற்சி சுமார் எழுபது ஆண்டுகள் ஆகும், அதாவது ஒவ்வொரு 35 வருடங்களுக்கு ஒருமுறை இது தன் திசையை மாற்றுகிறது, அதாவது,1970 களின் முற்பகுதியில் இது திசை மாறியதாகவும், அடுத்த மாற்றம் 2040 களின் நடுப்பகுதியில் இருக்கும். இந்த சுழற்சியானது "நாளின் நீளம்" என்று அழைக்கப்படும். மேலும், பூமி அதன் அச்சில் சுழற்ற எடுக்கும் நேரத்தில் மேற்புறத்தில் சிறிய மாறுபாடுகள் ஏற்படும்” என்கிறார்கள்.
மேலும், உள் மையமானது மேற்பரப்பில் வசிப்பவர்கள் மீது பல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைக் குறிப்பிடுவதற்கு இதுவரை எதுவும் ஆதாரம் இல்லை. ஆனால் பூமியின் அனைத்து அடுக்குகளுக்கும், உள் மையத்திலிருந்து மேற்பரப்பு வரை உடல்ரீதியான தொடர்புகள் இருப்பதாக அவர்கள் நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வில் ஈடுபடாத வல்லுநர்கள், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் குறித்து, தங்களின் வேறு பல கோட்பாடுகளை சுட்டிக்காட்டி, பூமியின் மையத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர். அது என்ன என்பதை பார்கலாம்.
சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர், ”கடந்த பத்தாண்டுகளில் பூமியின் உள் மையமானது சுழல்வதை நிறுத்திவிட்டதாகவும், இப்போது எதிர் திசையில் சுழலக்கூடும்” என்றும் கூறியுள்ளனர். நேச்சர் ஜியோசைன்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வானது,
என நிபுணர்கள் நமக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் நில அதிர்வு நிபுணரான ஜான் விடேல் கூறுகையில்,
என்று அவர் கூறுகிறார்.
விடேல் என்ற விஞ்ஞானி கடந்த ஆண்டு தனது, ஆராய்ச்சியை வெளியிட்டார், அதில்,
என்று தெரிவித்தார். மேலும் “உள் மையமானது 2001 முதல் 2013 வரை குறிப்பிடத்தக்க அளவில் நகர்ந்தது, அதன் பின்னர் தன் நகர்வை நிறுத்திக்கொண்டது”என்கிறார்.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியலாளரான Hrvoje Tkalcic என்பவர், தனது சமீபத்திய ஆய்வின் முடிவில் உள் மையத்தின் சுழற்சியானது ஒவ்வொரு 20 முதல் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதாகவும். மேலும் இந்த கணித மாதிரிகள் பெரும்பாலும் தவறானவையாகத்தான் இருக்கக்கூடும், ஏனெனில் இவை கவனிக்கப்பட்ட தரவை தான் விளக்குகின்றன, எனவே, இந்த கண்டுபிடிப்பு சர்ச்சைக்குரியதாகவே இருக்கும்." என்கிறார்.