மாணவர்கள் உயர் கல்விக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்தப் பட்டங்கள் இந்தியாவில் செல்லாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் கூறியுள்ளது.
இது தொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயர் கல்வியைத் தொடர பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைவரும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பாகிஸ்தானின் பட்டப்படிப்புக் கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் சேர விரும்பும் எந்தவொரு இந்திய நாட்டவரும் அல்லது இந்திய வெளிநாட்டுக் குடிமகனும் இந்தியாவில் வேலை தேடவோ அல்லது உயர்கல்வி பெறவோ அடிப்படைதகுதி பெற மாட்டார்கள்.
இருப்பினும், பாகிஸ்தானில் உயர்கல்வி பட்டம் பெற்ற மற்றும் இந்தியாவினால் குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குழந்தைகள், உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதியைப் பெற்ற பிறகு இந்தியாவில் வேலை தேடுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.