திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் என்ற பணிக்கு 45 தற்காலிக காலிப்பணியிடங்களும் மற்றும் வேலூர் மாவட்ட நீதித்துறையில் நடுவர் நீதிமன்றங்களில் அடிப்படை பணிகளான இரவு காவலாளி உள்ளிட்ட 15 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் (திருநெல்வேலி)
2. இரவு காவலாளி (வேலூர்)
3. மசால்ஜி (வேலூர்)
காலிப்பணியிடங்கள்:
1. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் (திருநெல்வேலி) - 45
2. இரவு காவலாளி (வேலூர்) - 12
3. மசால்ஜி (வேலூர்) - 03
மொத்தம் = 60 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
இரவு காவலாளி பணிக்கான விண்ணப்ப படிவத்தினை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 16.05.2019, மாலை 05.45 மணி
கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணிக்கான விண்ணப்ப படிவத்தினை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 17.05.2019, மாலை 05.45 மணி
வயது வரம்பு:
1. பொது பிரிவினர் - குறைந்தபட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 30 வயதும் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - குறைந்தபட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 32 வயதும் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
3. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் - குறைந்தபட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 35 வயதும் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
1. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.20,600 முதல் அதிகபட்சமாக ரூ.65,500 வரை மாத சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. இரவு காவலாளி, மசால்ஜி போன்ற பணிகளுக்கு, குறைந்தபட்சமாக ரூ.15,700 முதல் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மாத சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
1. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கம்யூட்டர் சயின்ஸ் / கம்யூட்டர் அப்ளிகேஷன் போன்ற ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பையோ அல்லது இளங்கலை பட்டப்படிப்பில் (B.A / B.Sc / B.Com) போன்ற ஏதேனும் ஒரு துறையிலோ பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அதுமட்டுமின்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சில் (டைப்-ரைட்டிங்கில்) ஜூனியர் கிரேடை முடித்திருத்தல் வேண்டும்.
2. இரவு காவலாளி, மசால்ஜி போன்ற பணிகளுக்கு, குறைந்தபட்சமாக தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை:
1. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணிக்கு, ஆன்லைனில் https://districts.ecourts.gov.in/tn/tirunelveli - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பின்பு அதனை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் சேர்த்து கீழேயுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
திருநெல்வேலி - 627002.
2. இரவு காவலாளி, மசால்ஜி போன்ற பணிகளுக்கு, ஆன்லைனில், https://districts.ecourts.gov.in/tn/vellore -என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பின்பு அதனை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் சேர்த்து கீழேயுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
தலைமை நீதித்துறை நடுவர்,
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,
வேலூர் - 632009.
மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு, https://districts.ecourts.gov.in/sites/default/files/%20Notification%20for%20the%20post%20of%20computer%20operator%20dt%2002%2005%202019.pdf
மற்றும் https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%202019%20Criminal%20Unit%20-%20Vellore_2.pdf - போன்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.