பிளஸ் 2 மாணவர்களுக்கு டிஜிட்டல் மார்க்‌ஷீட்.. இனி ஆன்லைனிலேயே பெறலாம்..

பிளஸ் 2 மாணவர்களுக்கு டிஜிட்டல் மார்க்‌ஷீட்.. இனி ஆன்லைனிலேயே பெறலாம்..
பிளஸ் 2 மாணவர்களுக்கு டிஜிட்டல் மார்க்‌ஷீட்.. இனி ஆன்லைனிலேயே பெறலாம்..
Published on

பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்கள் மின்னணு மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல் லாக்கர் எனப்படும் மின் ஆவணக் காப்பகம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

www.digilocker.gov.in என்ற இணையதளத்தில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணைப் பயன்படுத்தி மின் ஆவணக் காப்பகக் கணக்கினை மாணவர்கள் துவக்கலாம். ஆதார் எண்ணுடன் அலைபேசி எண் இணைக்கப்படவில்லை என்றால் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தை அணுகி இணைத்துக் கொள்ளலாம். உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு மின்னணுச் சான்றிதழை இணையதள வழியாகவே சமர்ப்பிக்க இந்த முறை உதவும். மின் ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்தல், மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்தல் சார்ந்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com