கொரோனா அச்சுறுத்தலினால் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யபப்ட்டுள்ள நிலையில் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நிச்சயமாக தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளது யூ.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு.
வரும் செப்டம்பர் 30க்குள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் எனவும் யூ.ஜி.சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்யப்பட்டால் அது யூ.ஜி.சி வழிகாட்டு நெறிமுறைகளில் எதிர்விளைவுகளை ஏற்படுத்துமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு யூ.ஜி.சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா "தேர்வுகள் நடத்தபடாமல் பட்டங்கள் கொடுக்க வாய்ப்புகள் இல்லை. பட்டங்கள் வழங்க யூ.ஜி.சிக்கு மட்டுமே உரிமையுள்ள நிலையில் மாநிலங்கள் ரத்து செய்கின்ற தேர்வுகளுக்கு யூ.ஜி.சி எப்படி பட்டம் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
மாணவர்கள் தொடர்ந்து தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும். தேர்வுகள் நடத்தப்படாவிட்டால், மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படாது. அதுதான் சட்டம்” என தெரிவித்துள்ளார் அவர்.