இந்தியா முழுவதும் உயர்க்கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் பொறியியல் கல்வி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து வருகிறார்கள். சில கல்லூரிகளில் நேரடியாக விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டும் கலை அறிவியல் கல்லூரிகளில் பிகாம் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தற்போது பொறியியல் கல்வியில் டேட்டா சயின்ஸ் ஆன்லைன் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 40 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அப்கிரேடு என்ற தனியார் உயர்கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற நவீன தொழில்நுட்பப் படிப்புகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கற்பிக்கப்படுகின்றன. ஐஐடி பெங்களூரு, ஜான்மூர்ஸ் பல்கலைக்கழகம் லிவர்பூல் போன்ற உயர்கல்வி நிலையங்களுடன் சேர்ந்து டேட்டா சயின்ஸ் படிப்பை அந்நிறுவனம் வழங்கிவருகிறது.