பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்காக முதன்முறையாக நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 44 மத்திய பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள் உட்பட 90 உயர்க்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர CUET என்ற நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரு கட்டங்களாக தேர்வு நடைபெறுகிறது. 500 நகரங்களில் முதல்கட்ட நுழைவுத் தேர்வு இன்று தொடங்க உள்ளது. 8,10,000 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை முதல்கட்ட நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
சென்னையை பொறுத்தவரை குன்றத்தூர், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாம் கட்ட சியுஇடி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.