வணிகவியல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்? - +2 மாணவர்களின் கவனத்திற்கு...
+2 முடித்த மாணவர்கள் வணிகவியலில் என்னென்ன மேற்படிப்புகள் படிக்கலாம்? .. சென்னை பல்கலைக்கழக வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் திரு. ரங்கராஜன் அவர்களுடன் ஒரு நேர்காணல்
மாணவர்களின் மத்தியில் வணிகவியல் துறை எப்படி இருக்கிறது? ஏன் அதை தேர்வு செய்ய வேண்டும்?
வணிகவியல் என்பதும் மிகவும் முக்கியமான படிப்பு ஆக உள்ளது. இதில் B.Com-ல் மட்டுமே 13 பிரிவுகள் இருக்கிறது. எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு உறுதியான அடித்தளத்தை இந்தப் படிப்பு வழங்குகிறது.
+2 வில் அறிவியலை எடுத்து படிக்கும் மாணவர்கள் கல்லூரியில் நுழையும் பொழுது வணிகவியல் எடுத்து படிக்கலாமா? என்று நினைக்கிறார்கள் இவர்களுக்கான அறிவுரை என்ன?
அறிவியலை முதன்மையாக எடுத்து படித்திருக்கும் மாணவர்கள் கல்லூரியில் வணிகவியலை எடுத்து படிக்க இயலாது. ஆனால், அவர்களுக்கு BBA என்ற கோர்ஸ்ஸூக்கு வாய்ப்புள்ளது. B.com gen. Bom, accounding finance, marketing, CS, Honous, computer application, banking, ISM, என்று 13 வகையான கோர்ஸ் B.com ல் இருக்கிறது.
B.com LLB இண்டகிரேட் கோர்ஸ் எனப்படும் இது ஐந்து வருட படிப்பு இது , இதற்கும் நல்ல எதிர்காலம் உண்டு.