நாளை தொடங்குகிறது கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு

நாளை தொடங்குகிறது கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு
நாளை தொடங்குகிறது கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு
Published on

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 16ம் தேதி நிறைவடைந்தது. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கடந்த 3ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியானது.

இந்நிலையில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கி வரும் 27ம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 

பட்டப்படிப்புகள்:

1. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு - 5 1/2 ஆண்டுகள்
2. உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு - 4 ஆண்டுகள்
3. கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு - 4 ஆண்டுகள்
4. பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு - 4 ஆண்டுகள்

வயது வரம்பு:

31.12.2019 அன்றுக்குள், 17 வயது முதல் 21 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, பிளஸ்டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களைப் பயின்று அதில் 179 முதல் கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்

குறிப்பு:

சாதி அடிப்படையில் ஆண்டுக்கு ஆண்டு, கட் ஆப் மதிப்பெண்களில் மாற்றங்கள் உண்டு

மேலும் விவரங்களுக்கு,http://www.tanuvas.ac.in/UGRank/counselling/notification_ta.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com