கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகள்: பிளஸ் டூ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகள்: பிளஸ் டூ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகள்: பிளஸ் டூ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Published on

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 1.7.2020 ஆம் தேதியன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்.

பயிற்சிக்கான ஒட்டுமொத்தக் கட்டணம் ரூ. 14,850 மட்டுமே. கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிகளுக்கான சான்றிதழ்களும் இந்தப் படிப்பின்போது வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்கள் மாவட்டத்தில் உள்ள மேலாண்மை நிலைய முகவரிக்கு கூரியர் அல்லது பதிவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் நேரில் பெற்றுக்கொளளப்படாது.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 15.9.2020

விவரங்களுக்கு: www.tncu.tn.gov.in

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com