நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளான ஐஐடிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பெண்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாணவிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது குறித்து ஆய்வு செய்த திமோத்தி கோன்சாலஸ் துணைக் குழுவின் பரிந்துரைகள், கூட்டு சேர்க்கை குழுவால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இந்த பரிந்துரையை 2018- ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தலாமா என இந்த குழு பரிசீலிக்கும். இந்த இட ஒதுக்கீடு காரணமாக மாணவர்களுக்கான இடங்கள் குறையாது என்றும் சொல்லப்படுகிறது. அதே போல் ஜே.ஈ.ஈ அட்வாண்ஸ்ட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே ஐஐடி சேர்க்கைக்கு கருத்தில் கொள்ளப்படுவார்கள்.