குடும்பத்தின் நிதிச்சுமைக்காக முழு நேரமாக பணி புரிந்துவிட்டு, பகுதி நேரமாக கல்வியைக் கையில் எடுத்துள்ளனர் கோவை தனியார் மில்லில் பணிபுரியும் சில பெண்கள்.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் 8 வித்தியாசமான கல்விப்பிரிவிகளில் கோவையைச் சேர்ந்த தனியார் மில்லில் பணிபுரிந்து வரும் அப்பெண்கள் படித்த நிலையில், படிப்பின் முடிவில் தங்கப்பதக்கங்களையும், ஒரு மாணவி சிம்கா விருதையும் பெற்றுள்ளார்கள். தடைகளைத் தாண்டி கல்வி கற்று சாதனைப் புரிந்துள்ள அந்த மாணவிகளின் உத்வேகம் தரும் காணொளி தொகுப்பு இங்கே: