சிதம்பரம்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டம்

சிதம்பரம்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டம்
சிதம்பரம்: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டம்
Published on

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 55 வது நாளாக போராட்டம். அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உள்ளது. அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்ட இங்கு, அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 42 நாட்களாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டும் அரசு கண்டுகொள்ளாததால் கடந்த 20ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடக்க கடந்த 21 ஆம் தேதி முதல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையிலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

மாணவர்களின் இந்த போராட்டம் இன்று 55வது நாளாக நீடித்தது. இதையொட்டி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டம் நடத்தினர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள போராட்டப் பந்தலுக்கு அருகே மாணவ, மாணவிகள் வரிசையாக ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டம் நடத்தினர். அரசு நிர்ணயித்த கல்லூரி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஒற்றைக்காலில் நின்று போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com