போராட்டம் குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில், “ஒவ்வொரு வருடமும் அகில இந்திய அளவில் 60,000 முதுகலை மாணவர்கள் பணிக்கு வருவார்கள். அதில் 4,000 மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்துக்கு பணிக்கு வருவார்கள். தற்போது ஏற்பட்டுள்ள முதுகலை கலந்தாய்வு நீட்டிப்பால், அந்த மாணவர்கள் பணிக்கு வருவது தடைபட்டுள்ளது. இது கொரோனா பேரிடர் நேரம் என்பதால், மருத்துவமனையில் ஏற்கெனவே மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இப்படியான நிலையில் கலந்தாய்வை தள்ளிப்போட்டுக்கொண்டே போவது, எங்களுக்கு பணி சுமையை அதிகப்படுத்துகிறது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லுரியில் மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், டிசம்பர் 13 முதல் அனைத்து விதமான சிகிச்சைகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறினர்.