தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை திறப்பதற்கான தேதியையும், செமஸ்டர் தேர்வுகள் நடத்துவதற்கான அட்டவணையையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியதை தொடர்ந்து, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை திறப்பதற்கான தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி பொறியியல் படிப்புக்கான இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளுக்கான வகுப்புகள் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 21 ஆம் தேதி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மே 24 ஆம் தேதியும், எழுத்துத் தேர்வு ஜூன் 2 ஆம் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல், ஏப்ரல் 12 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு படிப்புக்கான முதல் செய்முறை தேர்வு ஏப்ரல் 15 ஆம் தேதியும், எழுத்துத் தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.