சிபிஎஸ்இ 10, 12 பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம் உள்ளே..!

சிபிஎஸ்இ 10, 12 பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம் உள்ளே..!
சிபிஎஸ்இ 10, 12 பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம் உள்ளே..!
Published on

மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 10ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையின்படி, மார்ச் 1ஆம் தேதிமுதல் சிபிஎஸ் இ பொதுத்தேர்வுகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதம் செய்முறை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு சிபிஎஸ் இ தேர்வு மே 4ஆம் தேதிமுதல் ஜூன் 7ஆம் தேதி வரையும், 12ஆம் வகுப்புக்கு தேர்வுகள் மே 4ஆம் தேதிமுதல் ஜூன்11ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 10ஆம் வகுப்புக்கு காலை 10.30 முதல் மதியம் 1.30 மணிவரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் பின்பற்றி தனித் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

சிபிஎஸ் இ பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்ட ரமேஷ் பொக்ரியால், மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்துமாறு ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் அச்சமின்றி, பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள வேண்டுமெனவும் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com