தமிழக மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வில் பி.டெக். மீன்வளத்துறை பொறியியல் படிப்பையும் சேர்க்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக மீன்வளத்துறையில் உதவி பொறியியல், உதவி ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க பி.டெக். மீன்வளத் துறை பொறியியல் படிப்பை தகுதியாக சேர்க்கவில்லை எனக் கூறி, நாகையை சேர்ந்த கீதா பிரியா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.