எல்லை பாதுகாப்பு படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாரா?

எல்லை பாதுகாப்பு படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாரா?
எல்லை பாதுகாப்பு படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாரா?
Published on

மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படை எனப்படும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் (BSF)-இல், குரூப்-பி, குரூப்-சி பிரிவுகளின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர், கான்ஸ்டபிள் - க்ரூவ் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:
1. சப்-இன்ஸ்பெக்டர் (SI - Master, Engine Driver, Workshop)
2. தலைமைக் காவலர் (Head Constable - Master, Engine Driver, Workshop)
3. கான்ஸ்டபிள் - க்ரூவ் (Constable - Crew)

காலிப்பணியிடங்கள்:
1. சப்-இன்ஸ்பெக்டர் (SI) - 17
2. தலைமைக் காவலர் (Head Constable) - 140
3. கான்ஸ்டபிள் - க்ரூவ் (Constable - Crew) - 160

மொத்தம் = 317 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 16.03.2020

வயது வரம்பு:
குறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

குறிப்பு:
பணிகளுக்கேற்ப வயது வரம்பு மாற்றங்கள் உண்டு.

கல்வித்தகுதி:

1. சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணிக்கு, குறைந்தபட்சமாக 10+2 வகுப்பில் தேர்ச்சியும், அதிகபட்சமாக இளங்கலை பட்டப்படிப்பில் (பி.இ / டிப்ளமோ - மெக்கானிக்கல், மெரைன் இன்ஜினியரிங்) தேர்ச்சி, அத்துடன் பணிக்கேற்ப சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அவசியம்

2. தலைமைக் காவலர் (Head Constable - RM) என்ற பணிக்கு, மெட்ரிகுலேசன் அல்லது அதற்கிணையான படிப்பில் தேர்ச்சி அத்துடன் பணி சார்ந்த ஐடிஐ டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி அவசியம்.

3. கான்ஸ்டபிள் - க்ரூவ் என்ற பணிக்கு, மெட்ரிகுலேசன் அல்லது அதற்கிணையான படிப்பில் தேர்ச்சி அத்துடன் நீச்சல் தெரிந்தவராக இருத்தல் அவசியம். கூடுதலாக படகு (Below 265 HP) ஓட்டத் தெரிந்தவராகவும், அதில் ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், http://www.bsf.nic.in/en/recruitment.html - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம்.

குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.

பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:


தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.ஐ பணிக்கான விண்ணப்பக்கட்டணம் - ரூ.100
2. தலைமைக் காவலர், கான்ஸ்டபிள் பணிகளுக்கான விண்ணப்பக்கட்டணம் - ரூ.200

தேர்வு செய்யப்படும் முறை:

இரு கட்டங்களாக இந்த பணிக்கு ஆட்களை தேர்வு செய்யப்படுவர்.

1. முதற்கட்ட எழுத்து தேர்வு
2. இரண்டாம் கட்டத்தில் PST, PET & மருத்துவ தகுதி தேர்வு

ஊதியம்:
குறைந்தபட்சமாக, ரூ.21,700 முதல் அதிகபட்சமாக ரூ.1,12,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு:
பணிகளுக்கேற்ப மாத சம்பளத்தில் மாற்றங்கள் உண்டு.

மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு, http://www.bsf.nic.in/doc/recruitment/r0118.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com