பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில், பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது அந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:
1. Manager (HR) & Assistant Manager (HR) - 06
2. Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Engineer, Section Engineer -100
3. Deputy Chief Engineer, Executive Engineer - 50
4. Chief Engineer / General Manager, Additional Chief Engineer / Deputy General Manager, Manager (Arch) - 37
5. Graduate Engineer (Civil) - 25
6. Senior Consultant, Consultant - 02
ஆக மொத்தம் = 220 காலிப்பணியிடங்கள்
வயது வரம்பு:
அதிகபட்சமாக 60 வயது வரை இருத்தல் வேண்டும்.
பணிகளைப் பொருத்து வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.
ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,65,000 வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணிகளைப் பொருத்து ஊதியங்களில் மாற்றம் உண்டு.
கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, பி.இ (சிவில்) / பி.டெக் (சிவில்) என்ற இளங்கலை பட்டப்படிப்பையும், அதிகபட்ச கல்வித்தகுதியாக எம்.இ / எம்.டெக் / எம்.பி.ஏ / என்ற முதுகலை பட்டப்படிப்பையும், பயின்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
குறிப்பிட்ட பணிகளுக்கு பணி அனுபவங்கள் தேவை.
பணிகளை பொருத்து பணி அனுபவங்களில் மாற்றங்கள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், www.bmrc.co.in - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager(HR),
Bangalore Metro Rail Corporation Limited,
III Floor, BMTC Complex,
K.H.Road, Shanthinagar,
Bengaluru - 560027
superscribing the envelope as “APPLICATION FOR THE POST OF……………………………………’’
மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://english.bmrc.co.in/FileUploads/5a3670_CareerFiles.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.